சுமந்திரன் மீது விக்கி பகிரங்க குற்றச்சாட்டு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தமது அரசியல் அறிவுத்திறனை தமது சொந்த செயற்பாடுகளுக்கு மாத்திரம் பயன்படுத்தியுள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.


அவ்வாறு செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவரால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயற்பட முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மக்களிடமே வாக்குகளை பெறுகின்றார்.

அவர் கொழும்பிலுள்ள மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்னு செல்லவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்பட்ட கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாகவே தாம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி பேச்சுவார்த்தை அழைப்பு விடுத்தால் செல்வதற்கு தயாராகவுள்ளதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.