படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் இன்று ( 20) காலை மரணமடைந்துள்ளார் .


யாழ் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயை சேர்ந்த இரவீந்திரன் தனுசன் (வயது 22) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.

குறித்த இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை ( 14) அன்று மாலை அல்வாய் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வீதியின் அருகே நின்ற மரத்துடன் மோதியுள்ளது .

இதன்போது குறித்த இளைஞன் தலைக்கவசம் இன்றி பயணம் செய்தமையினால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த ஆறு நாட்களாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று காலை வைத்தியசாலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.