வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

அரச நியமனம் வழங்கக் கோரி வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.


தாம் மாகாணத்தில் நீண்டகாலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததை கண்டித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியமனத்தை வழங்க கோரி பல்வெறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், குறிப்பாக வட மாகாண ஆளுநர்களாக வருகின்ற பலரையும் சந்தித்துள்ளோம்.

இந்நிலையில் தற்போது வந்துள்ளா புதிய ஆளுநர் தமக்கான நியமனங்களை உரிய முறையில் விரைவாக வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

இதே வேளை போராட்டத்தில் தொண்டர் ஆசிரியர்கள் ஈடுபட்ட போதும் அலுவலகத்தி ஆளுநர் இல்லாத காரணத்தினால் ஆளுநரின் ஊடக செயலாளர் எஸ்.முகுந்தன் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது எதிர்வரும் புதன் கிழமை ஆளுநருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுமென அவர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.