கிளவியும் கிழவியும் - ஓர் பார்வை !
'சலங்கை ஒலி' படத்தில் ஒரு புகழ்பெற்ற காட்சி இருக்கிறது. சைலயாவின் நடன அரங்கேற்றம் நடக்கும். அதில் அவர் 'பஞ்ச பூதங்கள்' என்பதை 'ஐந்து பேய்கள்' என்பதாகப் புரிந்து கொண்டு அபிநயம் பிடிப்பார். கமல்ஹாசன் அதை பத்திரிகையில் கண்டித்து எழுதி, அதனால் நேரில் வரவழைக்கப்பட்ட பொழுது, அந்த வரிகளுக்கு பல வடிவங்களில் நடனம் ஆடியும் காண்பிப்பார்.
அண்மையில் ஒரு விழாவில் சிறுமிகளின் நடனம் ஒன்றை கண்டு களித்தபடி இருந்தேன். 'கண்ணோடு காண்பதெல்லாம்' என்கின்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து சிறுமிகள் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார்கள். 'சலசல சலசல ரட்டைக் கிளவி... தகதக தகதக ரட்டைக் கிளவி உண்டல்லோ' என்கின்ற புகழ்பெற்ற வரிகள் வந்தன. சிறுமிகள் முன்பக்கம் வளைந்து கூன் விழுந்த கிழவி பொல்லுப் பிடிப்பது போன்று அபிநயம் செய்தார்கள்.
எனக்கு பக்கத்தில் இருந்தவர் என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். இருவரும் தலையலடித்துக் கொண்டோம். 'கிளவி' என்பதை 'கிழவி' என்பதாகப் புரிந்து கொண்டு சிறுமிகளுக்கு நடனம் பழக்கியிருக்கிறார்கள். அதற்காக சலங்கை ஒலி படத்தில் கமல்ஹாசன் எழுதியது போன்று 'இது பரதநாட்டியத்திற்கு ஏற்பட்ட களங்கம்' என்றெல்லாம் நான் எழுத மாட்டேன். சம்பந்தப்பட்டவர்கள் என்னை அழைத்துக் கேட்டால், பதிலுக்கு எனக்கு கமல்ஹாசன் போல் பல வடிவங்களில் அந்த வரிகளுக்கு ஆடிக் காட்டத் தெரியாது என்பது அதற்கு ஒரு காரணம். அந்த சிறுமிகள் தமக்குக் கற்பிக்கப்பட்டதை மிகச் சிறப்பாகவே ஆடினார்கள் என்பதும் ஒரு முக்கியமான காரணம்.
இன்னும் ஒரு கதை இருக்கிறது. எமது கலைக்கூடத்தில் கற்கின்ற சிறுமிகள் தாமாகவே ஒரு பாடலுக்கான நடனத்தை தயாரிக்கின்றோம் என்று முன்வந்தார்கள். பதின்மவயதினைக் கூட அடையாத சிறுமிகள் அவர்கள். அவர்களின் ஆர்வத்தைப் பார்த்து நானும் சம்மதித்தேன். ஒரு வாரம் கழித்து, அவர்கள் பழகியதை ஆடிக் காண்பிக்க சொன்ன போது, ஒரு காட்சியில் கைகளால் வெட்டுவது போல் ஆடினார்கள். 'எதற்கு இப்படி ஆடுகிறீர்கள்' என்று கேட்ட பொழுது, பாடலில் 'வெட்டி' என்று வருகிறது என்று சொன்னார்கள். உண்மையில் அது 'வெட்டி' அல்ல, 'வெற்றி'. நல்ல வேளையாக கவனித்து திருந்தினேன். இல்லையென்றால் மேடையில் வெற்றியை வெட்டித் தள்ளியிருப்பார்கள்.
இப்பொழுது மூத்த ஆசிரியர்கள் பலர் நடனம் பழக்கும் வேலையை பெரிய மாணவிகளிடம் கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் என்ன பழக்கியிருக்கிறார்கள் என்பதை பின்னர் கவனிப்பது இல்லை. நடனம் பழக்கிய மாணவிகள் தமிழில் அத்தனை தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது இல்லை. அதனாலேயே 'கிளவி' என்பது 'கிழவியாக' வந்து நிற்பது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
கலைகளை பழகினால் மட்டும் போதாது. அந்தக் கலைகளை திறம்பட வெளிப்படுத்துவதற்கு தாய்த் தமிழும் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளாது விட்டால், எதிர்காலத்தில் இப்படியான தவறுகள் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
வி.சபேசன்
21.01.2020
யேர்மனி