கடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்- யுனெஸ்கோ!!

கடந்த 2019ஆம் ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்றான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.


‘கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் பட்டியல்’ என யுனெஸ்கோ ஆய்வகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளுது.

இந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட பாதி குறைந்துவிட்டது என்ற போதிலும், குற்றவாளிகள் கிட்டத்தட்ட மொத்த தண்டனையையும் அனுபவித்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொத்தத்தில், யுனெஸ்கோ 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான தசாப்தத்தில் 894 ஊடகவியலாளர்கள் கொலைகளை பதிவு செய்தது. இது ஆண்டுக்கு சராசரியாக 90 ஆகும். 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 99ஆக இருந்தது.

உலகின் அனைத்து பிராந்தியங்களிலும் ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி 22 கொலைகள், ஆசிய – பசிபிக் நாடுகளில் 15, அரபு நாடுகளில் 10 கொலைகள் என பதிவு செய்யப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு 61 சதவீதம் ஆயுத மோதலை அனுபவிக்காத நாடுகளில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2014 இன் நிலைமை தலைகீழானது, இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக இருந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.