வனாந்தர இரவுகள். . .பாகம் 2!!
ஆரணி......என் கதையை எதற்காக கேட்டாயோ, நான் அறியேன்.....ஆனால், சில்வியாபிளாத்தின் கவிதைகளைப்போல இந்த வனாந்தர இரவுகளும் காலம் கடந்தும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எனக்கு மனமகிழ்ச்சியே......
உனக்கு எழுத நினைத்து எனக்குள் நான் என்னைத் தேடிப் பார்க்கிறேன்.......
எத்தனை விதமாய் நான் தெரிகிறேன் தெரியுமா.......நீ சிரித்துக்கொள்வாய் என்பது எனக்குத் தெரியும்.....ஆனாலும்
நம்மை நாம் தேடுவதும், நம்மை நாம் நேசிப்பதும் நம்மை நாம் பாராட்டுவதும் நமக்கு நாமே யாதுமாவதும் எத்தனை பெரிய ஆளுமை தெரியுமா?????
இந்த பூமியை ஸ்பரிசித்தபோது நான் விழிவிரிததுச் சிரித்தாக அம்மா அருகில் நின்ற என் பெரியம்மா சொல்லியிருக்கிறார். அதனால்தானோ என்னவோ, என் விழிகளின் தேடலும் என் உதடுகளின் புன்னகையும் இன்று வரை குறையவேயில்லை.
குண்டுக் கன்னங்களும் கூரான நாசியும் எடுப்பான என் தோற்றத்தின் அடிப்படை என்பார்கள் உறவுகள்.
நான் அழுத நாட்களும்.....அழிச்சாட்டியம் செய்த பொழுதுகளும் மிகக்குறைவு என அம்மா சொல்லும்போதெல்லாம் எனக்குள் நான் சிரித்துக்கொள்வேன்.
"குழந்தையிலும் பொறுமை கொண்டவளோ நான் என......"
முதற் பெண்குழந்தைக்குப் பிறகு ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த என் பெற்றவர்களுக்கு ஆண் குழந்தைகளுக்கான தைரியத்தோடும் துணிவோடும் பெண்குழந்தையாகவே வந்து பிறந்தவள் நான் என் அப்பா அடிக்கடி சொல்வதுண்டு.
சின்ன வயது முதலே, அன்பினால் அகமகிழ்ந்த எனக்கு, உறவுகளோடு வாழ்வதும் மனம் விட்டுச் சிரிக்கவும் நிறையவே பிடிக்கும்.
என் குழந்தைப் பருவம் என்பது குதூகலமாகத்தான் கழிந்தது. என்னைத் தூக்கி எடுத்து யாரும் கொண்டாடியதாய் எனக்கு நினைவில்லை, யாரோடும் நான் அந்தளவிற்கு ஒட்டிக்கொள்ளவில்லை போலும்........
தொடரும்......
கோபிகை.