வெந்தயத்தின் மகத்துவம்.!!

உடல் ஆரோக்கியத்தில் இருந்து அழகை பாதுகாப்பது வரை கசப்பான வெந்தயத்தின் குணங்கள் இனிப்பானதாவே இருக்கிறது.


 முக்கியமாக பெண்களுக்கு வெந்தயம் ஒரு வரப்பிரசாதம்.

🔸வெந்தயத்தில் இருக்கும் டயாஜினின் என்ற சத்து மாதவிடாய் வலியை போக்க சிறந்தது.

🔸வெந்தயத்தை பொடியாகவோ, களியாகவோ பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் துவங்குவதற்கு ஒரு வாரம் முன்னமாக தொடர்ந்து எடுத்துக் கொண்டால் அதிக வலி வருபவர்களுக்கு வலி கட்டுப்பாட்டில் இருக்கும்.

🔸வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடித்து கோதுமை மாவுடன் கருப்பட்டியை சேர்த்து களியாக பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுத்தால் பால் சுரப்பு அதிகமாகும்.

🔸தலை முடி உதிர்வதை தவிர்க்க வெந்தயத்தை  இரவு தண்ணீரில் ஊறப்போட்டு பின்னர் அரைத்து தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இது கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும், முடி உதிர்வது நிற்கும்.

🔸பொடுகு தொல்லை உள்ளவர்களுக்கு ஊறிய வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை குறையும்

🔸சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி தினமுமு மூன்று வேளை அரை ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

🔸தவறான உணவு பழக்கத்தால் கல்லீரலில் கொழுப்பு படிந்தவர்களுக்கு  ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும். இதற்கும் வெந்தயம் சிறந்த மருந்தாகும்.

🔸வெந்தயத்தை கொதிக்கவைத்து வடிகட்டி சூடாக கொப்பளித்தால் தொண்டை கட்டு சரியாகும்.

🔸வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இதன் வழவழப்பாக இருக்கும் தன்மை வயிற்றில் மெல்லிய படலத்தை ஏற்படுத்தி வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பு தரும்.

🔸வெந்தயத்தை எப்பொழுதும் அப்படியே சாப்பிடுவதை விட நீரில் ஊற வைத்து அல்லது பொடித்த பயன்படுத்துவது சிறந்தது.

உணவுப்பழக்கத்தில் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி அதை எந்த உணவுப் பொருளின் மேலும் தூவி உட்கொண்டால் உடலில் நச்சுத்தன்மை சேராது.
Blogger இயக்குவது.