விக்ரமரட்னவின் இடத்திற்கு சமன் ரத்னபிரிய நியமனம்!

ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள அவரின் பதவிக்கு சமன் ரத்னபிரியவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.


அது தொடர்பில் இன்றைய தினம் எழுத்து மூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியான சமன் ரத்னபிரிய அரச தாதியர் சங்கத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன நேற்று தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்தார்.

இந்நிலையில் , குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.