சம்பந்தன் - மாவையை ஓரம்கட்டிவிட்டு கூட்டமைப்பின் தலைவராக துடிக்கின்றாராம் சுமந்திரன்-விக்கி குற்றச்சாட்டு!!

"இரா.சம்பந்தனையும் மாவை சேனாதிராஜாவையும் இன்னும் பலரையும் ஓரங்கட்டிவிட்டுத் தலைமைத்துவத்தைத் தானே பெறத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் முயல்கின்றார். கூட்டமைப்பின் அடுத்த தலைவர் தானே என்ற முறையில் அவர் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்."


- இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

'எங்கள் கட்சியையே தேசியத் தலைவர் அடையாளம் காட்டினார்; நாங்களே உண்மையான வாரிசுகள்' என்று நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆனோல்ட்டும், சயந்தனும் சுமந்திரனுடன் சேர்ந்து மார்தட்டப் போவதை உங்களால் ஊகிக்க முடியாதிருக்கின்றதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தம்பி தொடக்கிவிட்ட கூட்டு, தவறான தலைவர்களின் கைகளுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும்? கொள்கைகள் பறிபோவன. சுயநலம் தலைவிரித்தாடும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த வாரத்துக்கொரு கேள்வி அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Blogger இயக்குவது.