மட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவர் மாணவன்மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!!

மட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவர் காதில் இரத்தம் வரும் அளவுக்கு மிருகத்தனமாக தாக்கியதில் , மாணவன் ஒருவர் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.


மட்டக்களப்பு கல்குடா பாடசாலையில் 8ஆம் ஆண்டு கல்வி பயின்றும் வரும் மாணவன் ஒருவரே இவ்வாரு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

பாடசாலைக்கு கல்வி கற்பதற்காக செல்லும் மாணவர்களிடம் இவ்வாறு சில ஆசியர்கள் கடும்போக்குடன் நடந்து கொள்வது மாணவ்ர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நோக்கி பாடசாலைக்கு மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் பாடசாலைக்கு அனுப்புகின்ற நிலையில், ஆசிரியர்கள் இப்படி மூர்க்கத்தனமாக சிறுவர்கள் என்றும் பாராமல் தலையில் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதவறல்ல,தவறு செய்தால் தண்டிப்பது அவசியம்,ஆனால் அந்த தண்டனை மாணவர்களை திருத்தவேண்டுமே தவிர அவர்களுக்கு கல்வி வெறுக்கும் அளவுக்கு அமையக்கூடாது.

இது சம்பந்தமாக பெற்றோர்கள் பொலிஸ்சில் முறைப்பாடு செய்துள்ளதுடன், கல்குடா வலயக்கல்வி அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த மாணவனுக்கு நடந்த அநீதி நாளை மற்றொரு மாணவனுக்கும் நடக்ககூடாது என்பதற்க்காகவே பெற்றோர்கள் முறைப்பாடு செய்தார்கள்.

இந்த கல்குடா பாடசாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல முறையில் செயற்பட்டு வந்த நிலையில், இன்று இப்படியான காட்டுமிரான்டி தன்மையால் மனம் சுளிக்கும் அளவுக்கு மாறிவிட்டதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தமான உயரதிகாரிகள் இதனை கவனத்திலெடுத்து இதற்கு நல்லதொரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.