கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு தேசிய செயற்பாட்டு குழு நியமனம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் தேசிய செயற்பாட்டு குழு ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த குழு நாளை மாலை 5 மணிக்கு சுகாதார அமைச்சர் தலைமையில் கூடி கொரோனா வைரஸ் தொடர்பாகவும் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளது.

அதேபோல் தொழினுட்ப ரீதியாக திட்டங்களை தயாரிப்பதற்காக இந்த குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தலைமையில் நாளை முற்பகல் 11 சுகாதார அமைச்சில் கூடவுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய பின்வருவோர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சர் நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
பத்ரானி ஜயவர்தன, சுகாதார செயலாளர்.
டொக்டர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்.
மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ்.
மேலதிக செயலாளர் வைத்தியலட்சுமி சோமதுங்க.
டொக்டர் நிஹால் ஜயதிலக.
விசேட வைத்தியர் அனுருத்த பதேனிய.
டொக்டர் பிரசன்ன குணசேன, மருந்துக் கூட்டுதாபனத்தின் தலைவர்.
மேலதிக செயலாளர் ஆனந்த விஜேவிக்ரம.
இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிகேடியர் டொக்டர் கிர்ஸாந்த பெர்னாண்டோ.
தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர
டொக்டர் பபா பாலிஹவடன.
மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் டொக்டர் ஜயருவன் பண்டார.
விமான நிலைய நிறுவனத்தின் தலைவர் ஜி.ஏ.சந்திரசிறி.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.