கோட்டாபாயவின் மற்றொரு அதிரடி உத்தரவு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்ற பின்னர் நாட்டில் பல்வேறு துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார்.


அந்தவகையில் தற்பொழுது பாடசாலைகள் , ஆசிரியர்கள், மற்றும் அதன் நிவாகம் என்பன தொடர்பில் அவர் அவதானம் செலுத்தி வருகின்றார்.

பாடசாலகளில் மாணவர்களை துஸ்பிரயோகம் செய்தல் , மற்றும் ஆசியர்களின் பழிவங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைகாலமாக பெற்றோர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் பாடசாலைகளில் இடம்பெறும் இவ்வாறான நடவடிக்கைகளினால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விகுறியாகி வருவதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.

இதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாடசாலை, நிர்வாகம்,ஆசிரியர்கள், மற்றும் குறைபாடுகள் தொடர்பாக முறைப்பாடுகள் இருப்பின் பெற்றோர், மற்றும் மாணவர்கள் கல்வி அமைச்சுக்கு தங்களது முறைப்பாடுகளை கடிதம் மூலமாக தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகளை Isurupaya, Battaramulla - Pannipitiya Rd, Battaramulla 10120, Sri Lanka என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முறைபாடுகளை அனுப்புபவரின் தகவல்கள் ரகசியம் பேணப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த செயல்பாடானது ஜனாதிபதி கோட்டாபயவின் நேரடி உத்தரவின் பெயரில் நடைபெறுவதாகவும் இதில் அரசியல் தலையீடுகள் செல்வாக்கு செலுத்தாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.