சோள பைகள் -வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அசத்தல் முயற்சி!!

100 சதவிகிதம் மக்கும் தன்மையில், மக்காச்சோளத்தில் தயாரிக்கப்பட்ட கவர்கள், வேலூரில் விற்பனைக்கு வந்துள்ளன.


தமிழகத்தில், மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. அதற்கு மாற்றாக, துணிப் பை, சணல் பை ஆகியவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்தநிலையில், மக்காசோளத்திலிருந்து தயாரிக்கப்பட்ட 100 சதவிகிதம் மக்கும் தன்மையுடைய கவர்களுக்கான விற்பனை மையம், வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஏலகிரி அரங்க வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!

இந்தக் கவர்கள் அனைத்து அளவுகளிலும் கிடைக்கின்றன. எந்த விதத்திலும் பிளாஸ்டிக்கைப் போல் கிடையாது. இயற்கையாகவே அழியும் தன்மையுடையது. 5 கிலோ வரையில் எடை தாங்கும் திறன் கொண்டவை.

ஹோட்டல் உணவு கவர்கள், மளிகை கவர்கள், ஷாப்பிங் கவர்கள், குப்பை கொட்டும் கவர்கள், மருத்துவமனை உபயோகத்துக்கான கவர்கள் எனப் பல்வேறு வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதுப்புது டிசைன்கள்... குவியும் ஆர்டர்கள்... பாலிதீன் பைகளுக்கு விடைகொடுத்த குடும்பம்
இவற்றின் ஆயுட்காலம் மண்ணில் புதைத்தால் 6 மாதம், அப்படியே இருந்தால் 18 மாதம். ஆண்ட்ராய்டு செல்போனில் `ஐ.சி.பி.ஏ’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, க்யூ.ஆர் கோடு வழியாகப் பைகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளலாம்.

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கம் பைகளை மொத்தமாகக் கொள்முதல் செய்கிறது. `பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் இந்தப் பைகளை வாங்கிப் பயன்படுத்தவேண்டும்' என கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.