பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு பேராயர் மக்களுக்கு அறிவுறுத்தல்!!
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவரும் அரசாங்கத்துக்கு நாம் இவ்வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோல், மக்களும் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். புத்திசாலித்தனமாக இதனைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு என்றே நாம் யோசிக்க வேண்டும்.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒரு சீனப்பெண் இலங்கையில் இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பல பிரதேசங்களுக்குச் சென்றுள்ளமையால், தொடர்புடைய உரிய நபர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வேளையில், நாம் நாட்டுக்காக மட்டும்தான் யோசிக்க வேண்டும். இது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும். விசேடமாக மாணவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முடிந்தளவு முகமூடிகளை அணிந்துகொள்ளுமாறும் இதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு, அதிகமாக கூட்டம் சேரும் இடங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நாம் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo