ரிஷாட் பதியூதீனை எச்சரித்த கருணா!

வார்த்தைப்பிரயோகம் என்பதை மிக அவதானமாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பயன்படுத்த வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.


அண்மையில் வவுனியா சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டிற்கு எதிராக பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கடுமையான வாத்தைப்பிரயோகம் பயனபடுத்தியிருந்தமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கருத்தில்,

குப்பை கொட்டும் பிரச்சினை என்பது பரவலாக எல்லா இடங்களிலும் இருக்கும் ஒரு பிரச்சினை ஆனாலும் இதற்கு அரசாங்கம் தான் சரியான தீர்வை முன்னெடுமுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இது போன்ற பிரச்சினை மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேமசங்களிலும் இருந்தது. இருப்பினும் நாம் உரியவர்களுடன் கதைத்து அதனை தீர்த்துக் கொண்டோம் எனவும் தெரிவித்தார்.

இது போன்ற பிரச்சினைகளை இனக்குரோதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக செய்பட வேண்டும் மேலும் வார்த்தைப்பிரயோகம் என்பதை மிக அவதானமாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்ததோடு,

அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில் வார்த்தைப்பிரயோகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி பிரதேச மக்களினால் அண்மையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய தீர்வினை பெற்று தரும் வரை குறித்த இடத்திலிருந்து விலகிச் செல்ல மாட்டோம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால் வவுனியா நகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் வாகனங்கள் நகரில் குப்பைகளை அகற்றாமல் தரித்து நின்றதுடன் அள்ளப்பட்ட குப்பைகள் குப்பை ஏற்றும் வாகனங்களில் நகரசபையிலேயே தரித்து நின்றுள்ளது.

இந்நிலையில், சாளம்பைகுளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவரது கருத்து மடத்தனமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் நாடாளுமன்றத்தில் உரை ஆற்றும் போது தெரிவித்திருந்தார்.

அவரின் அவ்வாறான கருத்தை வன்மையாக கண்டித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

குப்பை மேட்டினை அகற்றும்படி பிரதேசமக்களால் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 3 நாட்களாக தொடர்ந்த நிலையில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவரால் குறித்த விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா நீதவான் நீதி மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த போராட்டம் மக்களினது அன்றாட கடமைகளிற்கும், பாதுகாப்பிற்கும் தடையாக இருப்பதாக நீதிமன்றிற்கு தெரிந்ததால் அதில் பங்கு பற்றியுள்ளவர்களை அந்த இடத்தை விட்டு செல்ல அறிவுறுத்தல் வழங்குமாறு பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.