5G வலையமைப்பில் ஹுவாவி - லண்டன் வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!!

பிரித்தானியாவின் 5G வலையமைப்பில் ஹுவாவியின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ பேச்சுவார்த்தைக்காக லண்டன் வருகிறார்.


சீன நிறுவனத்தின் உபகரணங்களைப் பயன்படுத்தினால் உளவு ஆபத்து ஏற்படும் என்று மைக் பொம்பியோ ஏற்கனவே தெரிவித்திருந்ததுடன் ஹுவாவியைப் பயன்படும் நாடுகளுடன் அமெரிக்கா தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் சீன நிறுவனத்தின் உபகரணங்களைப் பயன்படுத்துவது பிரித்தானியாவின் நடப்புறவு நாடுகளுடன் ரகசியத் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளும் திறனை எந்தவகையிலும் பாதிக்காது என்று பிரித்தானியாவின் கலாசார அமைச்சர் பரோனஸ் மோர்கன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ பிரதமர் பொரிஸ் ஜோன்சனையும் சந்திப்பார் என்று கூறப்படுகின்றது.

வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவின் பிரித்தானிய விஜயம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து சிறப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பாகும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஆனால் ஹரி டன்னின் வழக்குக் குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் ஆகியோருடன் அமைச்சர் மைக் பொம்பியோ விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

அன் சாகூலாஸை ஒப்படைக்க வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கையை வோஷிங்ரன் மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ற் மாதம் 27 ஆம் திகதி நோர்தம்ப்டன்ஷயர்,ரஃப் கிரவுற்ரன் (RAF Croughton) அருகே ஹரி டன் பயணித்த மோட்டார் சைக்கிள், ஆன் சாகூலாஸ் செலுத்திய வொல்வோ (Volvo) காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

அமெரிக்க ராஜதந்திரியின் மனைவி ஆன் சாகூலாஸ் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தினார் என பிரித்தானியப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.