ஜனாதிபதிக்கு எதிராக மக்களின் மாபெரும் போராட்டம்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சேவின் பொறுப்பற்ற கருத்தை கண்டித்து இன்று (30) வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை. அனைவரும் மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கோத்தாபய கூறிய கருத்தால்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காலை 10 மணிக்கு இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காலை 10 மணிக்கு இந்த கவனயீர்ப்பு போராட்டம்முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் மரணச் சான்றிதழ்கள் எமக்கு வேண்டாம், சர்வதேச விசாரணை வேண்டும், கடத்தாதே கடத்தாதே எமது உறவுகளை இனியும்கடத்தாதே, கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே?, பத்துமாத வயிறு பற்றி எரிகிறது என் பிள்ளை எங்கேபோன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற பதாகைகளை கையில் ஏந்தி தமது உறவுகளின் விடுதலைக்காகஉணர்வுகளை வெளிப்படுத்தினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.