தேசத்தின் நிலைமையையும் அச் சிறுமி துயரமான தனது வாழ்வியலுக்கு கற்றல் உதவி!

தமிழ்தேசத்திற்காக அதன் தனித்துவமான இருப்பிற்காக உயிர் கொடுத்த அத்தனை மாவீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டில் எமது இனத்திற்கு அக்கறை உண்டு என்று காட்டிய ஒரு சம்பவம்.


அப்பா வீரச்சாவடைந்து விட்டார் அம்மா வேற கல்யாணம் செய்து சென்று விட்டா நான் அம்மம்மாவுடன் இருக்கின்றேன். பாடசாலைக்குச் சென்று வர எனக்கு ஒரு சைக்கிள் தருவீர்களாக என்ற அந்த சிறுமி தொலைபேசியில் கூறி வார்த்தைகளைப் பதிவிட்டு இருந்தோம்.

உண்மையில் யாரிடமும் இருந்து உதவியைக் கோரவேண்டும் என்பதறகாக நாம் அந்த பதிவினை இட்டிருக்கவில்லை. எமது தேசத்தின் நிலைமையையும் அச் சிறுமி துயரமான தனது வாழ்வியலுக்கு மத்தியிலும் எனது அப்பா வீரச்சாவடைந்து விட்டார் என்ற அந்த மிடுக்கை எம் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே பதிவிவேற்றப்பட்டது.

ஆளால் பதிவேற்றப்பட்ட அந்த நிமிடம் முதல் மூன்று நாட்கள் இடைவிடாமல் அந்த சைக்கிளை நான் வாங்கி தருகின்றேன் என்று தொலைபேசி அழைப்பு எடுத்தவர்களும் முகப்பு பக்கத்தில் தொடர்பு கொண்டவர்களும் ஏராளம். முதலில் தொடர்பு கொண்டவருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கும் நிலையும் ஏற்பட மற்றவர்களின் அந்த அவர்களின் மனமார்ந்த உதவிகளை மறுக்கவும் வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அந்தவகையில் சமூக சேவையாளர் மரியதாசன் இளங்கோ யாழ் எய்ட் ஊடாக துவிச்சக்கர வண்டி ஒன்றினை வழங்கியும் சமூக சேவையாளர் கனடா வாழ் சிவரமணன் சிவலிங்கம் கற்றலுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியும் உதவி புரிந்துள்ளார்கள்.

துவிச்சக்கர வண்டி, மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கிய மரியதாசன் இளங்கோ , சிவரமணன் சிவலிங்கம் மற்றும் அந்த உதவிகளை செய்தற்கு உடன் முன்வந்த அத்தனை பேருக்கும் யாhழ்.ஏய்ட் இனி மனமார்ந்த நன்றிகள்
Blogger இயக்குவது.