மக்களை அச்சமூட்டும் வகையில் யாரும் செயற்பட கூடாது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

கொரோனா வைரஸ் குறித்து மக்களை அச்சமூட்டும் வகையில் யாரும் செயற்பட கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.


கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித அளுத்கே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு பெண்ணை தவிர வேறு நோயாளர்கள் கண்டறியப்படவில்லை.

வைரஸ் தாக்கம் தொடர்பாக இலங்கையில் உள்ள மக்களை அச்சத்திற்கு உற்படுத்தும் வகையில் எவரும் செயற்பட கூடாது. பாடசாலை மாணவர்களை முக கவசத்துடன் பாடசாலை வர வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் சில பாடசாலைகளில் வழங்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொடர்பாக தீவிரமான நிலைமை இலங்கையில் இல்லை. முக கவசங்கள் அணியவேண்டிய தேவை ஏற்படின் வைத்தியர்கள் சங்கம் அதுதொடர்பாக உடனடியாக அறிவித்தல் வழங்கும்.

எனினும் வைரஸ் இலங்கையில் பரவும் பட்சத்தில் அதன் தாக்கம் பத்து நாட்களில் உச்ச அளவில் இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பேராசியர்கள் மற்றும் வைத்தியர்கள் குறிப்பிடுவதை வைத்து நோக்கும்போது கொரோனா வைரஸ் இலங்கையில் தற்போது வரையில் எவருக்கும் பரவவில்லை.

இது தொடர்பாக அநேகமானோரால் பலவித கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி மக்களை அச்சத்திற்குட்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

எதிர்வரும் நாட்களில் வைரஸ் பரவும் நிலை ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் நிலையில் நாம் இருக்க வேண்டும்.

தற்போதுள்ள நிலைமையில் முக கவசங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவையிலே இலங்கை உள்ளது. வைரஸின் தாக்கம் இல்லாத நாட்களில் முக கவசங்களை உபயோகப்படுத்தும் போது இலங்கையில் வைரஸ் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கு முகங்கொடுக்க முடியாத சிக்கல் நிலை ஏற்படும்.

வியாபார நோக்கத்திற்காக முன்வைக்கப்படும் பொய்யான கருத்துக்களை மக்களிடையே பரப்பி மக்களை அச்சத்திற்கு உற்படுத்த கூடாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.