தொழில்நுட்பங்களுக்குத் தேவை தடையா, நெறிமுறையா?

ஐரோப்பிய ஒன்றியத்தின் “Facial Recognition தொழில்நுட்பத்திற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும்” என்ற நிலைப்பாட்டிற்கு ஒரு முடிவெடுக்கும்படி சுந்தர் பிச்சை பேசியதைத் தொடர்ந்து, மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் இந்த விவாதமே தேவையில்லாத ஒன்று என்று கருத்து கூறியிருக்கிறார்.


பிரஸ்சல்ஸில் நடைபெற்ற ப்ரூகலின் திங்க் டேங்க் மாநாடு கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் உரையாற்றிய சுந்தர் பிச்சை, “இந்த தொழில்நுட்பத்தை தீங்கு விளைவிக்கும் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தக்கூடும். நல்லதுக்காகவும் பயன்படுத்தலாம். தீய காரணங்களுக்காக பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அரசாங்கங்கள் சில நெறிமுறைகளை வகுக்கும். அதுபோன்ற நெறிமுறைகளை, தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உருவாக்கப்படுவதைத் தவிர்த்துவிட்டு, இப்போதே நெறிமுறைகளை வகுத்துவிட்டால் தொழில்நுட்பங்களை உருவாக்கும்போதே நாங்கள் தேவையான மாற்றங்களை செய்துவிடுவோம். தொழில்நுப்டங்கள் மார்க்கெட்டுக்கு வந்தபிறகு அரசாங்கம் செயல்படுவது எங்களுடைய இழப்பை அதிகரிக்கும்.” என்றார்.

சுந்தர் பிச்சையின் இந்தக் கருத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரெசிடன்ட் ஸ்மித், “Facial Recognition தொழில்நுட்பத்தால் காணாமல் போன நிறைய குழந்தைகள் என்.ஜி.ஓக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சேர்வதற்கு இந்த தொழில்நுட்பம் கைகொடுத்திருக்கிறது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் இல்லாமல் எதிர்காலம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால், இவற்றை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்கவேண்டுமே தவிர, மற்றவற்றைப் பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை” என்று தன் உரையை முடித்தார் ஸ்மித்.

இது போன்ற தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் உலக சந்தைகள் மற்றும் மக்களின் தினசரி ஸ்மார்ட்ஃபோன்களில் கூட தொடர்ந்து வலுவடைந்துகொண்டே இருக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.