உலகின் குள்ளமான மனிதர் மரணம்!
உலகிலேயே உயரம் குறைந்த மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த கஜேந்திர தபா மகர் (27) காலமானார்.
கஜேந்திர தபா மகர் 1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி பிறந்தார். இவர் நேபாளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கஜேந்திர தபாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் காத்மண்டுவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போகாராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடும் காய்ச்சலால் அவதி அடைந்த கஜேந்திர தபாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நிமோனியா இதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திர தபா நேற்று முன்தினம் (17.01.2020) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உலகின் மிகவும் குள்ள மனிதராக இவர் 2010ஆம் ஆண்டு, தனது 18 வயதில் தேர்வு செய்யப்பட்டார். அப்போது இவர் 67.08 செ.மீட்டர் உயரமும், 6 கிலோ எடையும் கொண்டவராக இருந்தார். இதன் காரணமாக இவர் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்ததின் காரணமாக உலக நாடுகள் சில இவரை அழைத்துக் கௌரவித்தன. இருப்பினும் நேபாளத்தில் ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்.
கடந்த ஆண்டு வரை உலகின் குள்ள மனிதர் என்ற பெயரைத் தக்கவைத்திருந்த கஜேந்திர தபா அதை இழந்தார். 2019இல் உலகின் பல நாடுகளிலும் ஆய்வு நடத்தியபோது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூன்ரே 59.93 செ.மீட்டர் உயரமும், 5 கிலோ எடையும் இருப்பதால் உலகின் குள்ள மனிதர் என்ற பட்டத்தை கஜேந்திர தபாவிடம் இருந்து ஜூன்ரே பெற்றுக் கொண்டார்.
உலகின் மிகச் சிறிய மனிதரான கஜேந்திர தபா மகர் இதுவரை 12க்கும் மேலான வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தொலைக்காட்சிகளில் பிரபலமாகப் பேசப்பட்டவர் கஜேந்திர தபா. உலகில் உள்ள பல சிறிய மனிதர்களையும் சந்தித்துள்ள இவர் இந்தியாவில் உள்ள மிகச் சிறிய பெண்ணான ஜோதி அம்ஜ் எனப் பலரையும் சந்தித்துள்ளார். இந்த நிலையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கஜேந்திர தபாவுக்கு இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை