தமிழை நசுக்கும்வஞ்சனை கூடாது - கூட்டமைப்பு சுட்டிக்காட்டு!!
"மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்திலுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப் பலகையில் மீண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்" என்று நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-:
"மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்திலுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகை அமைச்சர் விமல் வீரவன்சவால் கடந்த 18 ஆம் திகதி திரைநீக்கம் செய்யப்பட்டபோது பெயர்ப்பலகையில் தமிழ் மொழியே முதலில் இருந்தது.
அப்போது மகிழ்ச்சியுடன் அதனைப் பார்த்த விமல் வீரவன்ச பின்னர் கொழும்புக்குச் சென்றவுடன் அந்தப் பெயர்ப்பலகையில் சிங்கள மொழியே முதலில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டு அவ்வாறே மாற்றினார். ஏன் இந்த ஓரவஞ்சனை?
தமிழ் - சிங்களம் என்ற வேறுபாட்டை மறக்க வேண்டும். நாம் ஒன்றாக வாழ வேண்டுமென விரும்புகின்ற நிலையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் இவ்வாறான இனவாத செயற்பாடு நல்லதல்ல" - என்றார்.