சென்னைப் புத்தகக் கண்காட்சி முழுவதும் இம்முறை தமிழ்த்தேசியம் வயம்.!!



#ஆழிஅரங்கு322

"தமிழ்த் தேசியத்துக்கான பெருந்திட்டம்"



புலிகள் போராட்டத்தை  ஒரு கோட்பாட்டுடன் நந்திக்கடலில் நிறுத்தினார்கள் என்பதைப் புரிந்து எதிரிகள் அதை மடைமாற்ற படாதபாடுபடுகிறார்கள்.

விளைவாக எமக்குள்ளிருந்தே 2009 இலிருந்து உற்பத்தியான இணக்க/ அவல/ அடிபணிவு/ ஒப்படைவு/ சரணாகதி அரசியல் முகவர்களைக் கொண்டு நந்திக்கடல் அரசியலை தொடர் கேள்விக்குட்படுத்திக் கெண்டேயிருக்கிறார்கள்.

இதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் நாம் இல்லை..ஏனென்றால் நந்திக்கடலே இன அழிப்பின் பின் இப்படியான உதிரிகள் எல்லாம் உற்பத்தி செய்யப்படுவார்கள் என்பதை ஒரு கோட்பாடாகவே முன்னறிவித்திருக்கிறது.

புலிகளிடம் ஒரு பண்பு இருக்கிறது. நாம் தெளிவாக அறத்துடனும்/ அதே நியாயப்பாட்டுடனும் தெளிவாக  உள்ளபோது மாற்றுக் கருத்து / எதிர்க்குரலுக்குக் காது கொடுக்கலாம், ஆனால் அவற்றை எமது அறத்துடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதுதான் அது.

அதனால் இவை எது குறித்தும் கவனப்படுத்தாமல் ஒருமித்த சிந்தனை கொண்டவர்கள் கொண்டு நந்திக்கடலை கோட்பாட்டுருவாக்கம் செய்தோம் - இன்னும் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆழக்கடலை சிறு குச்சி கொண்டு அளக்கும் முயற்சி இது - ஆனாலும் பணி தொடர்கிறது.

இந்தப் பணியில் எம்மோடு அமெரிக்காவிலிருந்து  இறுதியாக இணைந்து கொண்டவர்தான் முனைவர் சு.சேதுராமலிங்கம்.

அவர் எழுதிய  " தமிழ்த் தேசியத்துக்கான பெருந்திட்டம்" நூல் அறிவாயம் வெளியீடாக   சென்னை கண்காட்சியில் கிடைக்கிறது.

நந்திக்கடல் கோட்பாடுகளை கிரமமாக உள்வாங்கிய ஒரு  தமிழ்த் தேசிய சிந்தனையாளனின் செறிவான பார்வை இந்த நூல்.

அவரை அறிமுகம் செய்வதில் "நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளி" பெருமிதம் கொள்கிறது.

Parani Krishnarajani
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.