மாணவியை வகுப்பறையில் துன்புறுத்திய ஆசிாியா், யாழ்.பாடசாலையில்!!

தனியாா் வகுப்புக்களுக்கு செல்ல கூடாதென கூறி மாணவியை பாடசாலை வகுப்பறையில் வைத்து துன்புறுத்திய ஆசிாியா் தொடா்பில் மாணவியின் பெற்றோா் மனித உாிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனா்.


இந்தச் சம்பவம் வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.ஆசிரியர் அடித்துத் துன்புறுத்தியதால் அச்சமடைந்த மாணவி, தான் பாடசாலைக்குச் செல்லமாட்டேன் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்போது நடந்தவற்றை மாணவியிடம் கேட்டறிந்த பெற்றோர், பாடசாலை அதிபரின் கவனத்துக்குச் சென்றுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு வழங்கவுள்ளதாகவும் பெற்றோர் அதிபருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மாணவியின் வீட்டுக்கு இன்று காலை சென்றிருந்த அந்தப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர் சார்பாக தான் மன்னிப்புக் கோருவதாகவும் சில மாதங்களில் தான் ஓய்வுபெற இருப்பதால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மாணவியை பாடசாலைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்காமல் மாணவியை பாடசாலைக்கு பெற்றோர் இன்று அனுப்பிவைத்தனர்.அந்தப் பாடசாலையில் கற்பிக்கும் சம்பந்தப்பட்டம் ஆசிரியர் ஏற்கனவே இதேபோன்ற தவறையிழைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபரையும் கல்வி அதிகாரிகளையும் சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.