செக் குடியரசில் பரவும் மர்மக் காய்ச்சலால் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் பரவிவரும் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து செக் குடியரசின் சுகாதாரத் துறை அதிகாரி இவா கோட்வால்டோவா தெரிவிக்கையில், “நாடு முழுவதும் இன்புளூவன்ஸா தொற்றுநோய் பரவியுள்ளது. ஒவ்வொரு ஒரு இலட்சம் மக்களிலும் 1,865 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்மக் காய்ச்சல் தொடர்பான நோய்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொதுவாக குழந்தைகளையும் இளம் வயதினரையும் இந்த நோய் தாக்குகிறது. இந்த மர்மக் காய்ச்சலுக்கு ‘இன்புளூவன்ஸா ஏ வைரஸ்’ முக்கிய காரணமாக இருக்கலாம்.

கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்தம் தொற்றுநோயின் தாக்கம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் பிரான்ஸில் கடந்த நவம்பர் முதல் தற்போது வரை 22 பேர் மர்மக் காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இன்புளூவன்ஸா வைரஸ் மூலம் பரவுவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இன்புளூவன்ஸா தொற்றுநோய் ஐரோப்பாவில் பரவி வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.