சீனர்களுக்கு அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய தடை!
சீனாவிலிருந்து வரும் தங்கள் நாட்டின் குடிமக்கள் அல்லாதோருக்கு அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.
உயிர்களை காவுக் கொண்டுவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து அவுஸ்ரேலியா குடிமக்கள் அல்லது அவுஸ்ரேலியாமக்களுடன் நெருங்கிய தொடர்புடைய முக்கிய உறவினர்கள் அல்லாதோர் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.
சீனாவில் இருந்து அவுஸ்ரேலியாதிரும்பும் சொந்த நாட்டு மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும். இதனால் நாட்டு மக்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது. அனைவரும் சுதந்திரமாக செயற்பட வழிவகை செய்கிறது’ என கூறியுள்ளார்.
இதுதவிர, சீனாவுக்கு யாரும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என அவுஸ்ரேலியா வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த குவாண்டாஸ் விமானம் சீனாவுக்கான சேவையை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு சிலருக்கு மட்டுமே இருப்பது கண்டறிப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்கான ஆபத்து குறைவாகவே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நியூஸிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo