ஊடகவியலாளர் கபிலநாத்தின் ’22 முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா!

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் ’22 முகங்கள்’ என்ற நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.


தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில், வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் பல்வேறு துறைசார்ந்த 22 கலைஞர்களைப் பறைசாற்றும் நேர்காணல் தொகுப்புக்கள் அடங்கிய நூலே இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது.

தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை உயிர்த்துடிப்புடன் வாழவைக்கும் கலைநிலாக் கலாமன்றம் மற்றும் சுதந்திர ஆற்றுகை குழுவினரும் இணைந்து ‘மண்வாசனை’ எனும் கலை நிகழ்வை அரங்கேற்றியிருந்தனர்.

நூல் வெளியீட்டின் முதல் பிரதியினை நூலாசிரியர் நவரத்தினம் கபிலநாத்தின் தந்தை செ.நவரத்தினத்திற்கு பிரதம விருந்தினர்களால் வழங்கி வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையும் சிறப்பு விருந்தினர்களாக வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜனும் கௌரவ விருந்தினர்களாக வர்த்தகர் ச.இராசலிங்கம் மற்றும் மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்ற செயலாளர் செ.சபாநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா வடக்கு ஆசிரிய வள நிலைய முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் ஆய்வுரையினையும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பத்மாவதி ஜெயச்சந்திரன் அறிமுகவுரையினையும் நிகழ்த்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.