கொரோனாவை வென்றது காதல்!!

சீனாவில் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில், அந்நாட்டை சேர்ந்த தனது காதலியை திட்டமிட்டபடி கரம்பிடித்த மத்திய பிரதேச இளைஞருக்கு பாராட்டை பெற்றுள்ளார்.


மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சரை சேர்ந்த சத்யார்த் மிஸ்ராவும், சீனாவை சேர்ந்த ஷிகாகோவும் கனடாவில் ஒன்றாகப் படிக்கும்போது காதல்வயப்பட்டுள்ளனர். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சீனாவில் கொரானா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

இருப்பினும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடிவு செய்து, மணப்பெண்ணும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை மாண்ட்ஸர் வந்து சேர்ந்தனர்.

ஆனால் கொரானா அறிகுறி உள்ளதா என மணப்பெண்ணின் பெற்றோரையும், உறவினரையும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், திட்டமிட்டபடி நேற்று சத்யார்த்துக்கும், ஷிகாகோவுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. சீனாவில் இருந்து மணப்பெண்ணின் உறவினர்கள் சிலர் வருவதாக இருந்த நிலையில், இ-விசா முறை ரத்து, சீன அரசு அனுமதிக்காதது ஆகிய காரணங்களால் அவர்களால் வர இயலவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.