தமிழ் மக்களின் தீர்வு குறித்து மௌனம் காக்கும் ஜனாதிபதி!

நாட்டின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , இனவாதத்திற்கு வழியமைக்கும் அடிப்படைவாத அமைப்புக்களுக்கு இனி நாட்டில் இடமில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டிற்காக தன்னால் முடிந்ததைச் செய்ய தயாராக இருக்கிறேன் எனக்கூறிய அவர் மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கவும், வழக்கவும் தமது அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அதிகாரத்தைப் பகிரும்போது மத்திய அரசுடன் உள்ள பிணைப்புக்கள் குறித்து மிகத்தெளிவாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, இனப்பிரச்சினை மற்றும் தமிழ் மக்களின் தீர்வு குறித்து எதனையும் கூறவில்லை என்பதும் சுட்டிக்கட்டத்தக்கது.

இதேவேளை இன்றைய சுதந்திரதின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.