கற்பிட்டி வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டது!

கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலை , ஆதார வைத்திய சாலையாக (பி தரம்) தரமுயர்த்தப்பட்டுள்ளது.


இந்நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன்போது கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.இன்பாஸின் அழைப்பின்பேரில், வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில், சுகாதார இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன ஆகியோர், இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முஹம்மட் பரீட் உட்பட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், வைத்தியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்துகொண்ட மாகாண ஆளுநர் தலைமையிலான அதிதிகள், வைத்தியசாலையில் நடைபெற்ற வி​​சேட கலந்துரையாடலிலும் பங்கேற்றனர்.

இதன்போது, கற்பிட்டி ஆதார வைத்தியசாலயில் காணப்படும் ஆளணி, பௌதீக வளப் பற்றாக் குறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அதிதிகள், அத்தியாவசிய தேவைகளை உடனடியாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.