ஒரே ஆண்டில் 612 பேர் தற்கொலை முயற்சி!
யாழ்ப்பாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவர்களில் 105 பேர் உயிாிழந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தரவுகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது கடந்த நான்கு ஆண்டுகளைவிட மிகவும் உயர்வடைந்து காணப்படுவதாகவும் எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சற்றுக் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2016ஆம் ஆண்டில் 578பேர் தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 110பேர் உயிரிழந்தனர்.
அதேபோன்று, 2017ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்ற 579 பேரில் 59 பேர் உயிரிழந்தனர். 2018ஆம் ஆண்டில் 582 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 150பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் 612 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 105 பேர் உயிரிழந்தனர்.
இதேவேளை, ஒன்றிற்கு மேற்பட்ட தடவை தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு. இருந்தபோதும் இவ்வாறு தவறான முடிவினை எடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தச் செல்கின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo