வைத்தியர் ஷாபி வீட்டு சிசிரிவி தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் வீட்டின் சி.சி.ரி.வி. கமெரா காணொளிகளைப் பதிவு செய்யும் டி.ஆர்.வி. உபகரணத்தை அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்ப குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாயவுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் விஜித்த பெரேரா முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை முதலில் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் குற்றவியல் பொறுப்பதிகாரியே கைது செய்துள்ளார்.
இதன்போது அவரால் வைத்தியர் ஷாபியின் வீட்டில் இருந்து சீ.சீ.ரி.வி காணொளிகள் பதிவான டீ.வி.ஆர் உபகரணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அது மேலதிக விசாரணைகளுக்காக சீ.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அது முன்னைய விசாரணை அதிகாரிகளால் சந்தேக நபரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த டீ.வி.ஆர் உபகரணம் புதிய விசாரணைகளுக்கு அவசியம் என்பதால் அதனை சி.ஐ.டி.யிடம் மீள ஒப்படைக்க கடந்த ஜனவரி 12 ஆம் திகதி நீதிமன்றால் உத்தரவிடப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் அந்த டி. ஆர்.வி. உபகரணம் சி.ஐ.டி.யில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று குறித்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சி.ஐ.டி. சார்பில் விசாரணை அதிகாரியான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விஜித்த பெரேரா மற்றும் கான்ஸ்டபிள் சில்வா ஆகியோர் இதன்போது நீதிமன்றுக்கு விடயங்களை தெளிவுபடுத்தினர்.
அத்துடன் வைத்தியர் ஷாபியினால் மீள கையளிக்கப்ப்ட்ட டி.ஆர்.வி. உபகரணத்தில் எந்தக் காட்சிகளும் இல்லை எனவும், அவை அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சி.ஐ.டி.யினர், அதனை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அழிக்கப்பட்டவற்றை மீளப்பெறவும் அது தொடர்பில் அறிக்கை பெற்றுக்கொள்ளவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு அனுமதியளித்த நீதிவான் சம்பத் ஹேவாவசம், குறித்த டி.ஆர்.வி. உபகரணத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப உத்தரவிட்டதுடன் , வழக்கை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துகொள்ள உத்தரவிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo