தாய்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழப்பு – பலர் காயம்!

தாய்லாந்தின் நகோன் ரற்சசிமா (Nakhon Ratchasima) என்ற நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தாய்லாந்தின் இராணுவச் சிப்பாய் ஒருவராலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த இராணுவச் சிப்பாய் முதலில் தன்னுடன் வந்த இராணுவச் சிப்பாய் ஒருவரையும் மேலும் இருவரையும் சுட்டுக் கொலைசெய்த பின்னர் வணிக வளாகம் ஒன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

ரேர்மினல் 21 ஷொப்பிங் சென்றர் (Terminal 21 shopping centre) என்ற வணிக வளாகத்துக்கு காரில் வந்த அவர், உள் ழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நிலையில், பொலிஸார் துப்பாக்கிதாரியைக் கைதுசெய்ய குறித்த வளாகத்தை சுற்றிவளைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, குறித்த இராணுவச் சிப்பாய் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்று தெரியவராத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.