மதுரையை கலக்கும் விஜய் போஸ்டர்கள்!!
`மாஸ்டர்' ஜோசப் விஜய்.. தமிழகத்தைக் காக்க களமிறங்குங்கள்! - மதுரையை கலக்கும் போஸ்டர்கள்
இன்னொரு போஸ்டரில் 'உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்' என்ற திருக்குறளையும் அதற்கு பொருளையும் பதிவிட்டு போஸ்டர் போட்டுள்ளனர்.
நடிகர் விஜய்யை எதிர்க்கும் சிலர், ஜோசப் விஜய் என்று அவரது முழுப்பெயரை குறிப்பிடுவதை விமர்சனமாகக் கருதிக் கொள்ளும் நிலையில், அப்பெயரை உரக்க சொல்லும் வகையில் 'மாஸ்டர் ஜோசப் விஜய்' என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மதுரையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
`மெர்சல்' படம் வந்தது முதல் நடிகர் விஜய்யை பா.ஜ.க-வுக்கு எதிரான திரைக் கலைஞராகச் சித்திரித்து வரும் நிலையில், சமீபத்தில் அவரைக் குறி வைத்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினார்கள். `பிகில்' படத்தின் தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்கள் மற்றும் ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்றது.
இந்தநிலையில் நெய்வேலியில் `மாஸ்டர்' படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று பா.ஜ.க-வினர் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்த, பதிலுக்கு விஜய் ரசிகர்கள் அந்தப் பகுதியில் குவிய பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் விஜய், நெய்வேலியில் குவிந்த ரசிகர்கள் முன் செல்ஃபி எடுத்தது வைரல் ஆனது. சினிமாவையே விஞ்சும் வகையில் விஜய்யை வைத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் ஜோசப் விஜய்... என்று தலைப்பிட்டு, ``ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களம் இறங்குங்கள்" என்று ஜெகன்மோகன் ரெட்டியும் பிரசாந்த் கிஷோரும் விஜய்யிடம் கேட்டுக்கொள்வதுபோல்' படத்துடன் வாசகத்தைப் பதிவிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர் அ.தி.முக, தி.மு.க உட்பட கட்சிகளை வம்பிழுப்பது போல் அமைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் இன்னொரு போஸ்டரில் 'உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்' என்ற திருக்குறளையும் அதற்குப் பொருளையும் பதிவிட்டு போஸ்டர் போட்டுள்ளனர்.
சமீபத்தில் விஜய்க்கு எதிராக நடந்து வரும் சம்பவங்களுக்கு பதில் சொல்வதுபோல் இந்தச் சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. திடீரென்று தோன்றிய பரபரப்பு போஸ்டர்கள் பற்றி விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்டப் பொறுப்பாளர் தங்கபாண்டிகூறியது, "நாங்கள் எப்போதுமே தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அவரால் தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். அதன் வெளிப்பாடுதான் இந்த போஸ்டர்கள். மற்றபடி சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்காக அல்ல. அதை எங்கள் தளபதி எதிர்கொண்டு வெற்றி பெறுவார்" என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo