ஊடகவியலாளர்களுக்கு கல்வி - உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்தல்!!

ஊடகவியலாளர்களுக்கு உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அரச – தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரச ஊடகங்களுக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ, தனிப்பட்டவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர் சிறந்த ஊடகக் கலாசாரத்திற்கான ஊடகப் பரப்பை சரியான முறையில் பயன்படுத்துமாறு ஊடகவியலாள்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

உயர்தரத்தில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்தரத்தில் சித்தியடைந்த அனைவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்கும் சவாலை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.

பகிடிவதையினால் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை வழங்குவதற்கான சந்தர்ப்பம் பற்றியும் கண்டறியப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.