சிசுவுக்கு எமனானது மருந்து!
திருகோணமலை சம்பூர் , நல்லூர், தோப்பூர் பிரதேசத்தில் சளிக்கு மருந்து எடுத்தபோது பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
பிறந்து 26 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10 ஆம் திகதி காலை சளி காரணமாக தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு தாய் குழந்தையை எடுத்துச்சென்றுள்ளார்.
இதன்போது, வைத்தியரால் குழந்தை பரிசோதிக்கப்பட்டு ஆவி பிடிக்கப்பட்ட நிலையில் பாணி மருந்து வழங்கப்பட்ட்டுள்ளது.
இதனை அடுத்து அதனை இரவிற்கும் வழங்குமாறு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வீடு வந்த குழந்தை மூச்சற்ற நிலையில் உள்ளதை அவதானித்த தாய் குழந்தையை தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது, குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து மரணமடைந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்பூர் பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டு தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo