ஜப்பான் கப்பலில் தவிக்கும் மதுரை அன்பழகன் அனுப்பிய தகவல்!!

கப்பலில் உள்ள 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் ஒட்டுமொத்தப் பயணிகளையும் இறங்க விடாமல் ஜப்பான் அரசு கடலில் நிறுத்தி வைத்துள்ளது.


மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்பழகன், பத்து வருடங்களாக ஜப்பானிலுள்ள டைமண்ட் பிரின்சஸ் நிறுவனத்தின் சுற்றுலா கப்பலில் பணியாற்றி வருகிறார்.

பல்வேறு நாடுகளுக்குச் சுற்றி வந்த இக்கப்பலில் உள்ள 3,500 சுற்றுலாப்பயணிகளில் 60 பேருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது தெரிய வந்ததால் ஜப்பான் அரசு, கடந்த 8 நாள்களாக அக்கப்பலில் உள்ளவர்களை துறைமுகத்தில் இறக்காமல் கடலிலேயே நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், ``கப்பலில் உள்ள 60 பேருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் ஒட்டுமொத்தப் பயணிகளையும் இறங்க விடாமல் ஜப்பான் அரசு கடலில் நிறுத்தி வைத்துள்ளது. மருத்துவ விசேஷ குழு மட்டும் கப்பலுக்குள் சென்று சிகிச்சை அளித்து வருகிறது.

வைரஸ் பாதிப்பில்லாத நான் உட்பட இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் உள்ளோம். அவர்களால் எங்களுக்கும் பரவி விடுமோ என்ற அச்சம் உள்ளது. அதற்குள் எங்களை மத்திய மாநில அரசுகள் மீட்க முயற்சி எடுக்க வேண்டும்' என்று, அன்பழகன் தன் குடுமபத்தினருக்கு வாட்ஸ் அப் வீடியோ அனுப்பியிருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் மனைவி மல்லிகா அரசுக்கு மனு அனுப்பினார். இந்தத் தகவல் சமூக ஊடகங்கள் மூலம் பரவியதால் மத்திய அரசு ஜப்பான் அரசிடம் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் வாட்ஸ்அப் வீடியோவில் பேசியுள்ள அன்பழகன், ``தமிழனுடைய பிரச்னையைத் தமிழக ஊடகங்கள் விரைவாகக் கொண்டு சென்றதால், எங்கள் நிறுவனம் எங்களை மீட்டு ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகிறது. உதவி செய்த அனைவருக்கும் நன்றி, விரைவில் ஊருக்கு வருவேன், உங்களைச் சந்திக்கிறேன்'' என்றும் அன்பழகன் தன் குடும்பத்திற்குத் தகவல் அனுப்பியுள்ளார். இதனால் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.