கிளிநொச்சியில் பல்கலைக்கு தெரிவான மாணவர்களுக்கு கௌரவிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான 14 மாணவர்கள், பெண்கள் அமைப்பினால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.


கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், இறுதி ஆண்டில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி இவ்வருடம் உயர் கல்விக்காக பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி, மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தில் அங்கத்தவர்களாக உள்ள குடும்பங்களிலிருந்து இவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 14 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, குறித்த மாணவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சுப்ரமணியம், கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் இணைப்பாளர் வாசுகி வள்ளிபுரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சுப்ரமணியம் தெரிவிக்கையில்,

“யுத்தத்தினாலும் வேறு காரணங்களினாலும் இங்குள்ள மாணவர்கள் கல்வியில் முன்னேற முடியாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் கடைசி மாவட்டமாகக் காணப்படும் நிலை காணப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் பல்வேறு சவால்களை இன்று எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் சிக்கிக்கொள்ளாது பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்யவேண்டும்” என தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் இணைப்பாளர் வாசுகி வள்ளிபுரம் கருத்து தெரிவிக்கையில், “இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கடைசி நிலையில் கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது. இதற்கு பிரதான காரணம் யுத்தம்.

இன்று அவ்வாறான சூழலில் மாணவர்கள் திறமையான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்கள். தற்போது காணப்படும் சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளாமல் நிதானமாக பல்கலைக்கழக கல்வியை மாணவர்கள் நிறைவுசெய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.