தாமரைக் கோபுரத்தின் முகாமைத்துவ தலைவராக இராணுவ அதிகாரி!!

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் புதிய முகாமைத்துவ தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் நாட்டின் முக்கிய துறைகளுக்கு இராணுவத்தின் உயர் பதவிகளை வகித்தவர்கள் சிவில் துறை பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

அந்த வரிசையில் தாமரைக் கோபுரத்தின் புதிய முகாமைத்துவ தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தில் 35 வருட சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானியாகவும் அவர் கடமையாற்றியதுடன் திரு.சமரசிங்க, கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.

அத்துடன் அவர் தாமரைக் கோபுர திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார்.

மேலும் இன்று இடம்பெற்ற் இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.