உண்மைக்காதல் உன்னதமானது - காதல் தம்பதியின் நெகிழ்ச்சிக் கதை!!
`காதலுக்குக் கண்கள் இல்லை' என்பார்கள்! அந்த வகையில், உண்மையான அன்பால் மட்டுமே பிணைக்கப்பட்டது மிரண்டா - ரெக்ஸியின் காதல் கதை. மிரண்டா, பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி. எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவரான ரெக்ஸி, மிரண்டாவைக் காதலித்துக் கரம் பிடித்தவர்.
சவால்களை மீறி திறமைகள் இருந்தும்கூட, பல்வேறு புறக்கணிப்புகள் இவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், நம்பிக்கையுடன் நடைபோடும் இந்தக் காதல் ஜோடி, சென்னையை அடுத்த கானத்தூரில் சிறிய வாடகை வீட்டில் வசித்துவருகிறார்கள்.
``சென்னை நிம்பெட் கல்லூரியில இவர் பி.எட் படிச்சுகிட்டிருக்கும்போது, அங்க நான் இன்டர்ன்ஷிப் போனேன். அப்போ எங்க இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு. பிறகு, நான் என் ஊரான திருச்சிக்கு வந்துட்டேன். தினமும் இ-மெயிலில் உரையாடினோம். ஒருகட்டத்துல மெயில் வாயிலாகவே புரப்போஸ் பண்ணிகிட்டோம். எங்க காதலுக்கு என் வீட்டில் எதிர்த்தாங்க. `எல்லாப் படைப்பும் நல்ல படைப்புதான். இவரோட குறைபாடுகளைக் காரணமா சொல்லி எங்க காதலைப் புறக்கணிக்காதீங்க’ன்னு வீட்டில் வலியுறுத்தினேன். ஆனாலும், சம்மதம் கிடைக்கலை.
என் வீட்டு எதிர்ப்பை மீறி இவரைக் கல்யாணம் செய்துகிட்டேன். பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிப்புடையோர் பற்றின விழிப்புணர்வு தமிழ்நாட்டில் ஒரு சதவிகிதம்கூட இல்லை. அதனால, என் கணவரின் திறமை இதுவரை எங்குமே பதிவு செய்யப்படாததுதான் என் வருத்தம். நான் பி.எஸ்ஸி படிச்சிருக்கேன். என் கணவர் டபுள் எம்.ஏ, எம்.எட் படிச்சிருப்பதுடன், உதவிப் பேராசிரியருக்கான யு.ஜி.சி தகுதித் தேர்விலும் வெற்றி பெற்றவர். ஆனாலும் இவரின் குறைபாடுகளைக் காரணமா சொல்லி இவருக்கு வேலை தர மறுக்கிறாங்க. திறமையின் அடிப்படையில எங்க இருவருக்கும் ஒரே இடத்துல வேலை கிடைச்சா போதும். நாங்க உழைச்சு வாழ்ந்துப்போம். அதுக்கு யாராச்சும் உதவி செய்தால் நல்லா இருக்கும்" என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார், ரெக்ஸி. இவர்களுக்கு இரண்டு வீட்டார் தரப்பிலும் ஆதரவில்லை.
``என் குறைபாடுகளைவிடவும், குடும்ப எதிர்ப்புகளை மீறி ரெக்ஸி எடுத்த முடிவுதான் சவாலானது. இன்ப துன்பம் உட்பட எந்த உணர்வுகளா இருந்தாலும் அதை ரெக்ஸியே சைகை மொழியில சொன்னால்தான் என்னால புரிஞ்சுக்க முடியும். எனக்காக ரெக்ஸி நிறைய தியாகங்கள் செய்திருக்காங்க. அது ஒரு வகையில சந்தோஷமா இருந்தாலும், ரெக்ஸியை நல்லா பார்த்துக்கணும்னு ரொம்பவே ஆசைப்படறேன். நான் வேலைக்குப் போகத் தயாரா இருக்கேன். ஆனா, பலரும் வேலை தர மறுக்கறாங்க. நிச்சயம் நல்லது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு" என்று மனைவியின் கரம் பற்றிக் கூறுகிறார், மிரண்டா.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo