11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்- நீதிமன்றம் விடுத்த அதிரடி தீர்ப்பு!!


கொழும்பில் ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று, சட்ட விரோ­த­மாக தடுத்து வைத்து, கப்பம் பெற்­றமை மற்றும் காணாமல் ஆக்­கி­யமை தொடர்பில் முன்னாள் கடற்­படை தள­பதி, பாது­காப்புப் படை­களின் முன்னாள் தலைமை அதி­காரி ரவீந்­திர விஜ­ய­கு­ண­வர்­தன உள்­ளிட்ட இரு­வரையும் விடு­தலை செய்­ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


குறித்த வழக்கு விசா­ரணை நேற்று கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது பிணையில் உள்ள சந்­தேக நபர்­க­ளான லக்­சிறி அம­ர­சிங்க எனும் தென்­னந்­தோப்பு உரி­மை­யா­ளரும் அத்­மிரால் ரவீந்ர விஜே­கு­ன­ரத்­னவும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

லக்­சிறி அம­ர­சிங்க சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சம்பத் மெண்­டிசும், ரவீந்ர சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்­னவும் பிர­சன்­ன­மா­கி இருந்தனர்.

விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சுந்­தர ஆஜ­ரானார்.

இதன்­போதே ,குறித்த கடத்தல் விவ­கா­ரத்தின் பிர­தி­வா­தி­யான கடற்­ப­டையின் முன்னாள் லெப்­டினன் கொமாண்டர் சந்­தன பிரசாத் ஹெட்­டி­யா­ரச்சி, நீதி­மன்ற புறக்­க­ணிப்பில் ஈடு­பட்டு நாட்­டை­விட்டு தப்­பிச்­செல்­வ­தற்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­யமை தொடர்பில் ரவீந்­திர விஜ­ய­கு­ண­வர்­தன மற்றும் லக்­சிறி அம­ர­சிங்க ஆகி­யோரை விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து விடு­விக்க முடி­யாது என நீதவான் தீர்ப்­ப­ளித்தார்.

அத்துடன் குறித்த இரு சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி நீரூ­பிப்­ப­தற்கு போது­மான சாட்­சி­யங்கள் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­திடம் காணப்­ப­டு­வ­தாக நீதி­மன்றம் கரு­து­வ­தா­கவும் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க சுட்­டிக்­காட்­டினார்.

அதற்­க­மைய, குற்­ற­வியல் சட்டக் கோவையின் 120/3 சரத்­திற்கு அமைய, சந்­தே­க­ந­பர்­களை விடு­விக்­கு­மாறு கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி சந்­தேக நபர் இருவர் சார்­பிலும் முன்­வைக்­கப்ப்ட்ட கோரிக்­கையை நிரா­க­ரிப்­ப­தா­கவும் நீதிவான் அறி­வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.