குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள்!!
திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில்காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பயிர் நிலங்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு(15) இடம்பெற்றுள்ளது.
தென்னை, கத்தரி, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர் நிலங்களே இக்காட்டு யானைகளின் தாக்குதலால் சேதமாக்கப்பட்டுவதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் யானைக்கான மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளபோதும் அவை தரமற்றதாக உள்ளமையால் அவற்றை தகர்தெரிந்துவிட்டு காட்ட யனைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவதாகவும் இதனால் இரவு வேளைகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இத்துடன் விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்ட இவ் பிரதே மக்கள் இவ்வாறான நிலைமையில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கலாய்க்கின்றனர்.
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் குறித்த கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில்,
இக்கிராமத்திற்கு செல்லும் வீதிகளில் இரவு நேரங்களில் வீதி விளக்குகள் இன்மை, காட்டுயானை தாக்குதல் ஆகிய முக்கிய பிரச்சினைகள் காரணமாக பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காட்டு யானைதாக்குதல் உள்ளிட்ட சக பிரச்சினைகளுக்கும் உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo