இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெளிவிவகார அமைச்சில்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை குறித்த அமைச்சில் இன்று (16) பிற்பகல் சந்தித்தப் பின் அங்கிருந்து வௌியேறிள்ளார்.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை குறித்து விளக்கம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த நம்பகமான சான்றுகளின் அடிப்படையில், இராணுவத் தளபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தமது நாட்டக்குள் நுழைய தடை விதித்தாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே அது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு இலங்கை அரசு அமெரிக்காவிடம் கேட்டுள்ளது.
ஆகவே இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo