மட்டக்களப்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில் கடந்த ஜனவரி 31ம் திகதி தொடக்கம் 2020 பெப்ரவரி 07ம் திகதி வரையும் 173 பேர் டெங்குநோய் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

இந்தவாரம் டெங்கு தாக்கத்தினால் மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை 26 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அது போன்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 23 பேர், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 31 பேர், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 24 பேர், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 07 பேர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 10 பேர், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 10 பேரும் அடையாளம் காணப்படுள்ளனர்.

அத்துடன் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 06 பேர், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 06 பேர், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 04 பேர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 09 பேர், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 09 பேர், கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 06 பேர், வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02, ஆகிய பகுதியில் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதில் குறிப்பாக மட்டக்களப்பில் 01 மரணமும், களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 01 மரணமும் பதிவாகியுள்ளதாக வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

எனவே மட்டக்களப்பு மக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



Blogger இயக்குவது.