இணைய பயன்பாடு தொடர்பில் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இணையம் பயன்படுத்தும் இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இணையத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடக பயனர்களுக்கு,இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் நிதி மோசடி தொடர்பிலான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இணையம் ஊடாக பணம் சம்பாதிக்கலாம் என்றஅடிப்படையில் மக்களின் ஈர்ப்பை பெற்று இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிதி மோசடி மேற்கொள்பவர்கள், சமூக ஊடக பயனர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, வாக்குறுதியளித்த சேவையை வழங்காமல் ஏமாற்றுகின்றமை கண்கானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலகு கடன் யோசனை முறைஊடாக பயனர்களின் வங்கி தரவுகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இணையத்தளத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பல்வேறு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசேட அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.