சவேந்திர சில்வா விவகாரம் தொடர்பில் ஹிருணிகா!!

சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள பயணத்தடையை ஆளும் தரப்பு தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகச் சந்திப்பில் ஹிருணிகா பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பு வழங்கவில்லையென ஒருபோதும் கூற முடியாது.

அத்துடன், நல்லாட்சியின் நோக்கத்தை இல்லாமல் செய்தவரும் மைத்திரிபால சிறிசேனதான்.

இதேவேளை கடந்த ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை தங்களின் அரசியல் தேவைக்காக தற்போதைய அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது.

அதேபோன்று மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களையும் தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தனர்.

ஆனால், தடயவியல் கணக்கறிக்கையில் கடந்த அரசாங்கத்தில் அதிகளவு மோசடி இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளமையினால் பிணைமுறியை அரசியல் பயன்பாட்டிற்கு பயன்படுத்த தற்போதைய அரசாங்கம் விரும்பவில்லை.

இந்நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அமெரிக்கா விதித்துள்ள பயணத் தடையை தங்களின் பொது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.