“டயமன்ட் பிரின்செஸ்” கப்பலில் உள்ள பிரித்தானியத் தம்பதிக்கு கொரோனா வைரஸ்!!
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட “டையமன்ட் பிரின்செஸ்” கப்பலில் உள்ள பிரித்தானியத் தம்பதியினருக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்களது மகன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சலி (Sally) மற்றும் டேவிட் ஏபெல் (David Abel) ஆகியோர் தாம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை காலை தமது மகனுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்தம்ரன்ஷையரைச் சேர்ந்த சலி மற்றும் டேவிட் ஏபெல் ஆகியோர் பிப்ரவரி 3 ஆம் திகதி டயமன்ட் பிரின்செஸ் (Diamond Princess) கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
குறித்த கப்பலில் மேலும் 74 பிரித்தானியப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விமானம் ஒன்றை ஒழுங்கு செய்யவுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பிரித்தானியப் பிரஜைகள் அழைத்து வரப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீட்பு விமானத்தில் நாட்டிற்குத் திரும்ப விரும்பும் பிரித்தானியப் பயணிகள் இங்கிலாந்து திரும்பியவுடன் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
இந்நிலையில் அமெரிக்கா ஏற்கனவே தனது 300 க்கும் மேற்பட்ட பிரஜைகளை கப்பலில் இருந்து மீளப் பெற்றுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo