விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து கவலை வெளியிட்டது லைக்கா!

இந்தியன்-2 படப்பின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன் கவலை வெளியிட்டுள்ளது.


உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றின் ஊடாகவே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக கிரேன் விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

சென்னை, பூந்தமல்லி அருகில் உள்ள இ.வி.பி.பிலிம் சிற்றியில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்தியன்-2 படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் சினிமாத் துறையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

உயிரிழந்த மூன்று பேரில் ஒருவர் கிருஷ்ணா என்பதுடன் இவர் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர்.

மற்றொருவர் ஷங்கரின் முகாமையாளரான மது என்பவர் என்றும் உணவு வழங்கும் வேலை செய்துவந்த சந்திரன் என்பவரும் இந்த விபத்தில் சிக்கி இறந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.