ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்.........!!
நேற்றையதினம் வலம்புரி அலுவலம் எழுவைதீவிலிருந்து வந்த மக்களால் தாக்கப்பட்டதாக ஒரு செய்தி பிரசுரமாகியிருந்தது. உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பது தெரியாமல், நடைபெற்ற சம்பவத்தின் உண்மைத்தன்மை புரியாமல் இச்செய்தியை பிரசுரிப்பதும் திரிபுபடுத்தி பேசுவதும் நல்லதொரு விடயமல்ல.
வந்தவர்கள் யாரும் கையில் பொல்லுகளையோ, கத்திகளையோ கொண்டுவரவில்லை. அவர்கள் எந்த அடாவடிகளையும் செய்யவும் இல்லை, மக்கள் சார்பாக நீதி கேட்கவே வந்திருந்தனர். அடாவடி என்று சொல்வதுபோன்று எந்த படங்களும் இதுவரை வெளியாகவில்லை. ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்துமுடிந்த திருக்கேதீச்சர பிரச்சினையை மீண்டும் நினைவுபடுத்தி மக்கள் மத்தியில் மத வேறுபாட்டை தணியாமல் செய்வதற்காகவே இதனைத் திரிபுபடுத்தியுள்ளதாக நினைக்கமுடிகின்றது.
இனத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை மதத்தால் வேறுபடுத்தி அழிக்கும் ஒரு சூட்சுமமாகவே இவ்விடயம் பார்க்கப்படுகின்றது. இலங்கை என்ற நாட்டை இராணுவ ஆட்சிக்குள் மெல்ல மெல்ல நிலைப்படுத்தும் இவ்வேளையில் எமது மக்கள் இது போன்ற இருட்டடிப்பிற்குள் மூழ்கியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும் இவ்வேளையில், பேசவேண்டிய, சொல்லவேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்க நமக்குள் நாமே பிளவுபட்டுக்கொண்டால் நிலைமையின் தீவிரம் எப்படி இருக்கும் என்பது தமிழ் மக்களாகிய நாம் அறியாதது அல்ல.
தமிழர்களின் அல்லலும் அவலமும் தொடரவேண்டும் என திட்டமிடப்படும் சதி வலைக்குள் வீழாதிருத்தலே இச்சந்தர்ப்பத்தில் மிகத்தேவையானதொன்றாகும். பிரித்தாளும் தந்திரம் என்பது சாதாரணமானதல்ல, புரிந்துகொண்டால் நல்லது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்.........
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo