அவுஸ்ரேலியாவில் ரயில் தடம் புரள்வு!!

சிட்னி மற்றும் மெல்போர்ன் இடையே 153 பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.


நேற்று (வியாழக்கிழமை) இரவு மெல்போர்னுக்கு வடக்கே உள்ள வாலன் என்ற நகரத்திற்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 54 வயது ஆண் ஓட்டுநரும், 49 வயதான பெண் இணை ஓட்டுநரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐந்து பெட்டிகள் மற்றும் என்ஜின் ஆகியவை தடங்களில் இருந்து புரண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. எனினும், விபத்து நடந்த நேரத்தில் தண்டவாளத்தின் நிலை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.